பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த தகவலை பிரதான சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
இதற்கான கடிதத்தை அவர் தயார் படுத்துவருகின்றார். பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைந்துவிடும்.
எனவே, இடைக்கால அரசொன்றுக்கு வழிவிடும் வகையிலேயே பிரதமர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளனர். ஜனாதிபதியின் வீடு உள்ளிட்டவற்றைகூட சுற்றிவளைக்க தொடங்கிவிட்டனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமர் பதவி விலக முடிவெடுத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment