” மஹிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்களே மே 09 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாவர். ” – என்று தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
தாக்குதல் நடைபெற்று ஒரு வாரமாகியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு இன்னமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இச் சம்பவத்துக்கு பாதுகாப்பு செயலாளரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
#SriLankaNews
Leave a comment