பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதியால், மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைக்கு மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அடுத்தவாரம் இடைக்கால அரசு அமையும் எனவும், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரியவருகின்றது.
#SriLankaNews
Leave a comment