10 45
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

Share

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் (Mahapola Scholarship) கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கவனம் செலுத்தியுள்ளார்

தற்போதைக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.

முன்னைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் குறித்த கொடுப்பனவு 7 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.

நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவர் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...