‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு முறை (One-time) உதவித்தொகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியம் முடிவு செய்துள்ளது.
சூறாவளியின் தாக்கத்தினால் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதையே இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் தகுதியுடைய மாணவர்கள், www.mahapola.lk என்ற அதிகாரப்பூர்வ மஹாபொல இணையத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.