உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலராக உயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 07 ஆண்டுகளில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் உச்சத்தை எட்டியுள்ள மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரை எட்டவில்லை.
இருப்பினும், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 15 சதவீதத்தால் அதிகரித்து 88 டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment