கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!
இலங்கைசெய்திகள்

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!

Share

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அன்று நாங்கள் நேசித்தோம். எவ்வாறாயினும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிருப்தி அளித்தமையால் இயக்கத்தில் இருந்து விலகிக் கொண்டோம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைசி வரை போராடி மரணித்துப் போனார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல அழிவுகளையும், இழப்புக்களையும் நாம் சந்தித்திருக்கின்றோம்.

உண்மையில் அடைய முடியாத இலக்குகளுக்காக அழிந்து போயிருக்கின்றோம். எனவே அடைந்தவற்றையாவது இனி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர பழைய புகழையே பாடுவதால் எந்தப் பயனும் இல்லை.

கடந்த காலங்களில் வன்முறை கலாசாரம் விரும்பியோ விரும்பாமலோ எமது சமூகத்திற்குள் திணிக்கப்பட்டது. இறுதியில் அது இயலாமையில் முடிந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் வன்முறைத் தலைவர்களைப் பற்றி சிந்திப்பது இனியும் பொருத்தமான விடயமே அல்ல. வன்முறைக்கான தேவைப்பாடு இனி மக்கள் மத்தியில் எழாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...