12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 1005 ஆல் குறைக்கப்படுகிறது என லிட்ரோ லங்கா தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.3728 ஆகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.402 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 1,502 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 700 ஆகும். இந்த விலை குறைப்பு மாற்றங்கள் அனைத்தும் இன்று இரவு முதல் அமுலாகும்.
நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் லிட்ரோவின் முயற்சிகளையடுத்து இந்த விலை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்ததையடுத்து லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக லாஃப்ஸ் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,596 ரூபாவாகும்.
#SRiLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment