20220525 135403 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு நிவாரணம்! – யாழ். அரச அதிபர் தெரிவிப்பு

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 78,444 குடும்பங்களிற்கு குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1900 ரூபா, 3200 ரூபா, 4500 ரூபா பெறுமதியான நிவாரண உதவிக் கொடுப்பனவு தொகையாக 225,162,020 ரூபா மாதாந்தம் சமுர்த்தி வங்கிகளினால் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு உலக வங்கியின் நிதி உதவியுடன் மூன்று மாதங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவிக் கொடுப்பனவிற்கு மேலதிகமாக நிதிக் கொடுப்பனவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3100 ரூபா ,3100 ரூபா, 3000 ரூபா என மொத்தமாக 239,277,600 ரூபா மேலதிகமாக சமுர்த்தி வங்கிகளுக்கு 26.05.2022 ஆம் திகதி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வைப்பிலிடப்பட்டு மே மாத கொடுப்பனவு சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 1-2 அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 1900 ரூபா கொடுப்பனவு 3100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 5000 ரூபாவாக வழங்கப்படும்.3 அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3200 ரூபா கொடுப்பனவு 3100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 6300 ரூபாவாக வழங்கப்படும். நான்கிற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4500 ரூபா கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 7500 ரூபாவாக வழங்கப்படும்.

மேலும் குறைநத வருமானம் பெறுகின்ற சமுர்த்தி நிவாரணம் பெறத் தகுதியான காத்திருப்பு பட்டியலில் உள்ள 27,978 குடும்பங்களிற்கு மூன்று மாதாங்களிற்கு 5000 ரூபா நிதி கொடுப்பனவு சமுர்த்தி வங்கிகளினால் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவு நிதி சமுர்த்தி வங்கிகளிற்கு இன்று வைப்பிலிட மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகிறது – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...