புத்தாண்டுக்கு முன் நிலுவைத் தொகையுடன் நிவாரணம்
அஸ்வெசும (Aswesuma) நிவாரணப் பலன்களை பெறாத அனைவருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் நிலுவைத் தொகையுடன் அந்த நன்மைகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் வைத்து இன்று (01.04.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கேகாலை, நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளுக்கே இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Comments are closed.