Fuel Price 780x436 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குறைந்தளவு எரிபொருளே யாழுக்கு விநியோகம்!

Share

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 18 நாட்களில் ஒக்டோன் 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்து இருந்தார்.

அந்த செய்தி வெளியான போது , பலரும் சமூக வலைத்தளங்களில் “பெற்றோலை குடிக்கும் யாழ்ப்பாணத்தான்” , யாழ்ப்பாணத்தானிடம் பெற்றோலை வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் ” என சகட்டு மேனிக்கு யாழ்ப்பாண மக்களை குற்றம் சாட்டியும் நையாண்டி செய்தும் பதிவுகளை இட்டனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையிலான பெற்றோல் விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்தபோது,

ஜனவரி மாதம் சூப்பர் பெட்ரோல் 79 ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல் 34 இலட்சத்து 65ஆயிரம் லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் சூப்பர் பெட்ரோல் 85 ஆயிரத்து 800 லீட்டரும் , பெட்ரோல் 33 இலட்சத்து 72 ஆயிரத்து 600 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் சூப்பர் பெட்ரோல் 59 ஆயிரத்து 400 லீட்டரும் பெட்ரோல் 37 இலட்சத்து 81ஆயிரத்து 800 லீட்டரும் விநோயோகிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சூப்பர் பெட்ரோல் 13ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல் 19 இலட்சத்து 50ஆயிரத்து 300 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதில் அதிகளவாக மார்ச் மாதம் சூப்பர் பெற்றோல் மற்றும் பெற்றோல் 38 இலட்சத்து 41 ஆயிரத்து 200 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் மாதம் ஒன்றுக்கு அண்ணளவாக 35 இலட்சம் லீட்டருக்கும் அதிகமான பெற்றோல் தேவைப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான கால பகுதியில் சூப்பர் பெற்றோல் விநியோகம் நடைபெறவில்லை. அந்நிலையில் பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அக்கால பகுதியில் ஏப்ரல் மாத புள்ளி விபரங்களுடன் ஒப்பிடுகையில் போதிய அளவான பெற்றோல் விநியோகிக்கப்படவில்லை.

ஏனெனில் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சூப்பர் பெட்ரோல் 13ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல் 19 இலட்சத்து 50ஆயிரத்து 300 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் 19 இலட்சத்து 63ஆயிரத்து 500 லீட்டர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மே 2 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சூப்பர் பெற்றோல் விநியோகம் இல்லாமல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் பெற்றோலே விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஆக இந்த காலப் பகுதியில் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 100 லீட்டர் பெற்றோல் குறைவாகவே விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாத கால பகுதியில் பெற்றோல் பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் காணப்படாத போது , இந்த மாதமே பெற்றோலுக்கான வரிசை அதிகளவில் காணப்படுகிறது. அதற்கு காரணம் இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விநியோகத்திற்கு வந்த பெற்றோலின் அளவு குறைவு என்பதாலையே ..

அதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் ஏனைய எரிபொருளான டீசல் 16 இலட்சத்து 96ஆயிரத்து 200 லீட்டரும் , சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 5ஆயிரத்து 600 லீட்டரும் , மண்ணெண்ணெய் 8 இலட்சத்து 84ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மே மாதம் 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் ஒக்டேன் 95 அக் கால பகுதியில் விநியோகிக்கப்படவில்லை.

ஆக கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் , இந்த மாதம் 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் டீசல் 8 இலட்சத்து 15ஆயிரத்து 100 லீட்டரும் , மண்ணெணெய் 4 இலட்சத்து 35 ஆயிரத்து 600 லீட்டரும் குறைவாகவே விநியோகிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

65

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...