Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயகத்துக்காக இழந்தவை ஏராளம்! – மீண்டும் ஒடுக்க முயற்சி என்கிறார் அநுர

Share

ஜனநாயகத்துக்காக ஜே.வி.பி. இழந்தவைகள் ஏராளம். 1983 இல்போன்று ஜே.வி.பியை ஒடுக்குவதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்படுகின்றது – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

1994 இல் ஜனநாயக அரசியலுக்குள் மீண்டும் பிரவேசித்தோம். அன்று முதல் இன்றுவரை ஜனநாயகத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவுமே போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஜனநாயக வியூகத்துக்குள் ஆழமாக காலூன்றி, அந்த வழியில் அரசியல் பயணத்தை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.

ஜனநாயக வழியில் பயணிப்பதால் எமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். 94 இற்கு பிறகு அரசியல் காடையர்களால் – குண்டர்களால் எமது தோழர்கள் படு கொலை செய்யப்பட்டனர். இவற்றுக்கு பதிலடியாக – ஒரு கல்வீச்சு தாக்குதலைக்கூட நாம் நடத்தியது கிடையாது. ஏன் ஜனநாயகத்துக்காகவே இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டோம்.

ஜனநாயகத்தை பலப்படுத்த 17 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த அழுத்தம் பிரயோகித்தோம். அதன்பின்னர் 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதற்காக நல்லாட்சியின்போது தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகித்தோம்.

1983 இல் கறுப்பு ஜுலையை திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளை தடைசெய்தனர்.

ஜே.ஆரின் ஜனநாயக விரோத அரசியலுக்கு எதிராக துணிந்து போராடினோம்.

முறைகேடாக நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினோம்.

இவ்வாறு ஜனநாயகத்துக்காக இன்றும் போராடினோம். இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஊழல், மோசடிகளுக்கு எதிரான எமது குரல் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கும். எம்மை மெளிக்க வைக்க முடியாது.

88-99 இல் அமைச்சர்களின் வீடுகளில் வதை முகாம்கள் இருந்தன. தற்போதைய அமைச்சர்களும் தற்போது பட்டியலை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

அமைதியாக போராடும் மக்களை தாக்கினால், அந்த இடத்தில் நாம் நிற்போம். வன்முறையாளர்கள் மக்களை தாக்கும்போது, வேடிக்கை பார்க்க முடியாது.

1983 இல் ஜே.வி.பிக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சியை மீண்டும் அரங்கேற்ற முற்படுகின்றனர்.

மே- 09 சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையை முன்னெடுக்கவும். அதற்கு முகங்கொடுப்பதற்கு தயார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...