கொன்றொழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள்: காணாமல்போன கிராமம்
இலங்கையில் யுத்த நிறுத்த சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால் தமிழ் கிராமமே காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23.08.2023) நடைபெற்ற ஏற்றுமதி-இறக்குமதி ஒழுங்குவிதி கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாகவும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாகவும் இங்கே பேசப்படுகின்றது. இது வளமான எழில் மிக்க நாடாகும். ஆனால் பொருத்தமான நிகழ்ச்சி நிரல் இன்றி வெளிநாட்டவர்களிடம் கையேந்தும் நிலையிலேயே நாடு இருக்கின்றது.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் அரசியல் அதிகாரங்களை முன்னிறுத்தி அவர்களுக்குத் தேவையான வேலைகளையே செய்தார்களே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்பது தற்போதைய பொருளாதார பின்னடைவு எடுத்துக் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
1 Comment