சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிட வைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
தனது கைத்துப்பாக்கியை காட்டி உங்களை கொலை செல்வேன் என மிரட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் நாட்டில் கடுமையான கண்டனங்களையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதையடுத்து லொஹான் ரத்வத்தவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கட்டளையிட்டுள்ளனர்.
இந்தநிலையில், தனது ராஜினாமா கடிதத்தை லொஹான் ரத்வத்த ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.