லொஹான் விவகாரம்! – அரசு நடவடிக்கை எடுக்கும்
அநுராதபுரம் சிறைச்சாலை சென்று அரசியல் கைதிகளை கொலைமிரட்டல் விடுத்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுவாழ்வளிப்பு அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கைதிகளை நோக்கி கைத்துப்பாக்கியை காட்டி மண்டியிட முயற்சித்திருப்பாராயின் அவரையும் சிறையில் வைக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் மனித உரிமைகள் குறித்து விவாதித்து வரும் இந்த நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. இதற்குரிய நடவடிக்கையை அரசு விரைவில் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
Leave a comment