லொஹான் விவகாரம் – சி.ஐ.டி விசாரணை!

lohan

லொஹான் விவகாரம் – சி.ஐ.டி விசாரணை!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அண்மையில் சென்ற லொஹான் ரத்வத்த, சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். – எனத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறித்த பதவியில் இருந்து மட்டுமே விலகினார். ஆயினும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சராக இன்னமும் நீடிக்கிறார்.

இந்த நிலையில்,லொஹான் ரத்வத்த மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் உட்பட அரசியல்கள் கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலதரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version