கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளுக்கும், களனி பொலிஸ் பிரிவுக்கும் நேற்றிரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
மிரிஹான மற்றும் களனி பகுதிகளில் நேற்றிரவு வெடித்த மக்கள் போராட்டங்களால், கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ,கல்கிஸ்ஸ மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
மக்கள் போராட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலேயே, ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment