3c322545 30b25ef6 kanchana wijeskera 850x460 acf cropped 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!

Share

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் லிமிடெட் ஆகியவற்றின் முகாமைத்துவம் மற்றும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (06) காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்ச்சியாக கியூஆர் கோட்டா முறைமையை  கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவித்த  அமைச்சர், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50 சதவீத எரிபொருள் தாங்கி கொள்ளளவை பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் பௌசர்களுக்கும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும் அதற்கு பின்னர், அனைத்து தனியார் பௌசர்களுக்கும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என்றார்.

இதேவேளை, 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...