மதுபான நிலையங்களுக்கு பூட்டு!!

closed
சித்திரை புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14)  மதுபான நிலையங்கள் மூடப்படும்  என, இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோத மதுபான விற்பனையை முறியடிக்கும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடரும்.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து மக்கள் தகவல்களை வழங்க முடியும்.

#SriLankaNews

Exit mobile version