2 27
இலங்கைசெய்திகள்

மீண்டுமொரு தேர்தல்! அநுர அரசாங்கத்தின் சாத்தியமற்ற திட்டம்

Share

மீண்டுமொரு தேர்தல்! அநுர அரசாங்கத்தின் சாத்தியமற்ற திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடந்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும், சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் அதனை நடத்துவது சாத்தியமற்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Uthaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி குறிப்பிடுவதை போன்று வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை முதலில் இரத்துச் செய்ய வேண்டும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுத்தாக்கல்களுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக வேட்புமனு கோருமாறு அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பினர் வலியுறுத்தியதற்கமைய வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு கடந்த 03 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் வகையிலான சட்ட வரைவு விரைவாக தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 30 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமப்பிக்கப்பட்டதன் பின்னர் அந்த சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதற்கு 14 நாட்கள் காலவகாவம் வழங்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கு பின்னர் இந்த சட்டமூலத்தை பெப்ரவரி மாதம் நிறைவேற்றிய மறுதினமே தேர்தலை நடத்த முடியாது. தேர்தல் பணிகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு போதுமான காலவகாசம் வழங்க வேண்டும்.

சட்ட திருத்தத்தை நிறைவேற்றி, தேர்தல் பணிகளை விரைவாக முன்னெடுத்தாலும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது.

ஏனெனில் மார்ச் – ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளது.ஆகவே 2025 ஆம் ஆண்டு மே மாதமளவில் தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...