1670598811 jaffna 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!

Share

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலைமையின் கீழ் அங்கு வாழும் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பால் பொருட்கள் உட்பட கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் தமது வாழ்வாதாரத்தை பேணுவதற்கு மாடு மற்றும் ஆடுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறாயினும், அண்மையில் ஏற்பட்ட குளிரான வானிலை காரணமாக 1,800 மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில், இவற்றை வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தும் மக்கள் தற்போது மிகவும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் “அத தெரண” வினவியது.

இதன்போது, வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.சி.எச். கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை ஆராய்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலையினால் உயிரிழந்துள்ளதாகவும், தொற்று நோயினால் அல்ல எனவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இறைச்சிக் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...