லிட்ரோ காஸ் சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாக்கும் 800 ரூபாக்கும் இடையில் அதிகரிக்கப்படவுள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு விலை அதிகரிக்குமாயின் 5 கிலோகிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை 200 ரூபாக்கும் 300 ரூபாக்கும் இடைப்பட்ட விலையில் அதிகரிக்கும் 2.3 கிலோகிராம் சிறையை கொண்ட சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது என அறியமுடிகின்றது.
#SriLankaNews
Leave a comment