வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் தெரிவுசெய்யப்பட்ட சுற்றுலா ஹொட்டல் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் மாத்திரமே மதுபானம் விற்பனை செய்வதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் மற்றும் பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவிக்கையில்,
தனிப்படுத்தல் காலத்தில் ‘பயோ பபிள்’ திட்டத்தின் கீழ் மதுவரித் திணைக்களத்தால் தரப்படுத்தப்பட்டுள்ள ஹொட்டல்களிலேயே சுற்றுலா பயணிகள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறது, குறித்த பயணிகளுக்கே மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய ஹொட்டல்கள் தொடர்பில் ஊரடங்கு காலம் நீங்கியதும் அனுமதியளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கிய பின்னர் சாதாரண மது விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதும், மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களே மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment