இந்தியக் கடற்றொழிலாளர்களது எல்லை மீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் எமது கடல்வளங்கள் அழிக்கப்படுகின்றன.
இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கடல் வளங்களும் அழிக்கப்படுகிறது. மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப்போல யுத்தத்திலிருந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு மக்கள் வந்துகொண்டிருக்கும்போது, மீண்டும் அந்த அழிவுகளை ஏற்படுத்தும் விதமாகவே செயற்படுகிறார்கள்.
இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியுடனும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனும் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசித் தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து தாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
#SrilankaNews