தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.குருநகர் பகுதியிலுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வருடக்கணக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
அவர்களை தேடியலைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்னமும் பல வேதனைகளை சுமந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொரோனாக் காலத்திலும் இருட்டுக்குள் இருக்கின்ற அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியூட்டுவதை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்து நடைபெற்றுள்ளது.
Leave a comment