துவாரகா தொடர்பில் சித்தி மதிவதனி எழுதிய வெளியிட முடியாத கடிதம்

tamilni 154

துவாரகா தொடர்பில் சித்தி மதிவதனி எழுதிய வெளியிட முடியாத கடிதம்\

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி எழுதிய கடிதங்கள், துவாரகாவின் சர்ச்சை தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கும் என விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் மனோகரன் கார்த்திக் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக தமிழர் தரப்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள துவாரகா விடயம் தொடர்பில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது சித்தி மதிவதனி எழுதிய கடிதங்களில், துவாரகா தொடர்பிலான உடற்கூற்று பரிசோதனைக்கு முன்னதாக தெரிந்துக்கொள்ள கூடிய சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தன்னிடம் உள்ள கடிதங்களானது துவாரகா தொடர்பில் அதிக தெளிவூட்டல்களை வழங்க கூடியது எனவும் தெரிவித்தார்.

Exit mobile version