images 1 1 3
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்து ஆலயங்களை பாதுகாக்க இந்திய பிரதமருக்கு கடிதம்!

Share

வடக்கு கிழக்கில் உள்ள இந்து ஆலயங்களை பாதுகாப்பதற்கு புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போன்று இந்து மத விவகார அமைச்சிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என உலக இந்துக் குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

உலக இந்து குழுவின் உறுப்பினரும் ஊடகவியலாளமான கல்பனா சிங் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது 2000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்  இந்து மக்களின்  கோவில்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதை  ஸ்ரீலங்கா இராணுவத்தின் மறைவின் கீழ் இயங்கும் புத்த பிக்குகள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் தீவிர ஈடுபாட்டினால் சில பழைய இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற உத்தரவுகளை பௌத்த பிக்குகளால் மீறுகின்ற நிலையும் காணப்படுகிறது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் இந்தச் செயற்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது, எனினும் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள சில கோவில்களும் பௌத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உலகெங்கிலும் உள்ள இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​இலங்கையில் உள்ள இந்துக் கோவில்களை இலங்கை அரசு அழித்துக் கொண்டிருந்தால், இந்த நடவடிக்கை நட்பு நாடுகளுக்கு ஆபத்தான அணுகுமுறையாக இருக்கும்.

இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சுற்றுலாத்துறையை பாதிக்கும். இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளோம்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போன்ற அதிகாரங்களைக் கொண்ட இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சை மீண்டும் நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கு இந்திய அரசாங்கமும் சர்வதேச நன்கொடையாளர்களும் அழுத்தம் விடுக்க வேண்டும்.

அத்தோடு இந்து மதப் பாரம்பரியத்தின் உடனடி அழிவைத் தடுக்க, தீவின் வடக்கு, கிழக்கு பிராந்தியத்திற்கான இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை நிறுவ இலங்கையை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLanka #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...