தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது தமிழ் கட்சிகளின் தலைவர்களால் இந்திய பிரதமருக்கு வழங்குவதற்கென தயாரிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட கடிதம், இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இடமையில், இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், சுமந்திரன், சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#SriLankaNews