“எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, எதிரணி பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 19 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 20 ஐ நீக்குவதற்கு ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இப்படியானவர்களுடன் எப்படி இடைக்கால அரசை முன்னெடுப்பது?
எதிரணிக்குரிய பொறுப்பை நிறைவேற்றவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே, இடைக்கால அரசில் இணைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. எதிரணி பக்கம்தான் பெரும்பான்மை பலம் உள்ளது. 03 ஆம் திகதி அதனை நிரூபிப்போம்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment