கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றது.
அத்துடன், எந்நேரத்தில் வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறலாம் எனவும், மொட்டு சின்னம் இல்லாவிட்டால் பங்காளிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் விமர்சித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.கூறியவை வருமாறு,
” மைத்திரிபால சிறிசேன, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களுக்கு தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? ‘மொட்டு’ சின்னம் இல்லாவிட்டால் அவர்களால் வெற்றிபெற்றிருக்கமுடியாது. ‘மொட்டு’ சின்னத்தால்தான் நானும் வெற்றிபெற்றேன். எனவே, கூட்டு பொறுப்பை அவர்கள் காக்க வேண்டும்.
உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்குள் பேச்சு நடத்தி தீர்வைக்காண முற்பட்டிருக்க வேண்டும். அதனைவிடுத்து வெளியில் விமர்சனங்களை முன்வைத்ததால்தான் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி சந்திப்புக்கு நேரம் வழங்கவில்லை என நினைக்கின்றேன்.
அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் அவர்கள் செல்லலாம். அரசுக்குள் இருப்பதாக இருந்தால் அரசால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்கவேண்டும்.” – என்றார்.
#SrilankaNews