மீண்டும் கொரோனாக் கொத்தணி உருவாகலாம்!!

corona 1

நாட்டில் ’பண்டிகை கொத்தணி’ என்ற கொரோனாக் கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால், அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நிலைமை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது, ஆகவே தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாகப் பேணும் வகையில் எதிர்வரும் பண்டிகை காலங்களிலும் பின்பற்ற வேண்டும்.

மீண்டும் கொரோனா கொத்தணி ஏற்படாமல் இருப்பதற்கு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version