tamilni 294 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தைகளிடையே வேகமாக பரவும் தொழுநோய்

Share

குழந்தைகளிடையே பரவும் தொழுநோயை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

குழந்தைகளிடையே தொழு நோயை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் சராசரியாக 1,500 முதல் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 10% பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே தொழுநோயை ஒழிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தையால் தொழுநோய் தொற்றாது எனவும், குழந்தைகளுக்கு ஏற்படும் தொழுநோயில் 90% பெரியவர்களால் தொற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 173 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 315 ஆகும். மேலும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழுநோயாளிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 151 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 116 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...