இலங்கையில் வசிக்கும் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு தொடர்பில் மத்தியவங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் வசிக்கும் ஒருவர், வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலரில் இருந்து 10,000 அமெரிக்க டொலராக குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஜுன் 16ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களை கொண்ட பொது மன்னிப்பு காலம் மத்தியவங்கியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பு காலம் முடிவடைந்த நிலையில், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய கட்டளையை மீறி வெளிநாட்டு நாணயத்தை உடைமையில் வைத்திருபோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment