thumbnail
இலங்கைசெய்திகள்

யாழில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Share

கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ் மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர்அலுவலர்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி ந.விஜிதரன் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாக யாழ்ப்பாணம் மாவட்டம் பூராகவும் பாவனையாளர் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு நீதிமன்றத்தினால் 25 இலட்சத்து 74,500 ரூபா
தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலையினை காட்சிப்படுத்த தவறியமை, அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்களினை பொதுமக்களுக்கு விற்றமை,
உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்கள் இல்லாது பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை, நுகர்வோரை ஏமாற்றும் நோக்கோடு பொருட்கள் மீது பொறிக்கப்பட்ட விலையினை மாற்றி புதிய விலையினை சேர்த்தமை,
இலத்திரனியல் பொருட்களுக்கு குறைந்தபட்ச 6 மாத கால உத்தரவாத காலம் வழங்க தவறியமை, அரச நியமங்கள் தரச் சான்று பொறிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்தமை காட்சிப்படுத்தியமை போன்ற விடயங்களை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர்கள் அலுவலர்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் தேடுதல்கள் மற்றும் கண்காணிப்பு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ன நடவடிக்கை எடுக்கப்படுவுள்ளது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் விதிமுறைகளுக்கு அமைய தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...