வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா தனது ஆளுநர் பதவியை எதிர்வரும் புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் ஆளுநர் அலுவலகத்திலிருந்து சற்றுமுன் வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார்.
இதேவேளை புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ள ஜீவன் தியாகராஜா தற்போது வகிக்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என அறிவித்துள்ளார்.
Leave a comment