வர்த்தகர்கள் மீது சட்டம் பாயும்!!- ரமேஷ் பத்திரண
நாட்டுக்கு சீனியை இறக்குமதி செய்யும் சில வர்த்தகர்கள் மிகவும் மோசமான வகையில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு செயற்படும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண எச்சரித்துள்ளார்.
மேலும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்தார்.
சீனி பிரச்சினை தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இன்னும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அடுத்த வாரம் இது தொடர்பான தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.
Leave a comment