1Q9A1844 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘வில்வம் பழச்சாறு கலந்த யோகட்’ அறிமுக நிகழ்வு

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட ‘வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்’ பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்று (12) புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, சேதன முறையில் உற்பத்தி செய்யப்படக் கூடிய வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்டுக்கான உற்பத்தி ஒப்பந்தம் கடந்த வருடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக இணைப்பு அலுவலகத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லை பாற்பொருள் உற்பத்தி நிலையத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்துக்கமைய உற்பத்தி செய்யப்பட்டட வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்டை சந்தைப்படுத்தும் செயன்முறை நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முல்லை பாற்பொருள் உற்பத்தி நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், ஜெய்கா செயற்றிட்ட அதிகாரிகள், விவசாய பீட அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக இணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர், பல்கலைக்கழகப் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...