யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் 50 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை வலித்தூண்டல் பகுதியில் உள்ள பற்றைக்காணியன்றில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினரிடம் கஞ்சாவை ஒப்படைத்து, நீதிமன்றின் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment