நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இரத்தினபுரி, நுவரெலியா, காலி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழையுடனான வானிலை நிலவும் காரணத்தாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Leave a comment