செய்திகள்இலங்கை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

New Project 48
Share

மழையுடன் கூடிய வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவளை,நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...