யாழ் காரைநகரில் பொதுமக்கள் சிலரினதும்,பொது அமைப்புகளின் எதிர்ப்பால் காணி சுவீகரிப்பிற்கான அளவீடு இடைநிறுத்தப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் காரைநகர் தெற்கு j/44 கிராம அலுவலர் பிரிவில் உள்ள மடத்துவெளியில் அமைந்துள்ள கடற்படை தளம் விஸ்தரிப்புக்காக காணியினை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் சிலரின் எதிர்ப்பால் அது இடைநிறுத்தப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்தவர்களின் எழுத்துமூலமான ஆவணத்தினை பெற்றுக்கொண்டு் அளவீடு செய்யாது திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.
#SriLankaNews
Leave a comment