MwunGgGZU7M6tQYVFkD0
இலங்கைசெய்திகள்

குருந்தூர் மலை வழக்கு இன்று நீதிமன்றில்!

Share

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்ததாவது,

1.பிடுங்ககப்பட்ட திரிசூலம் மீள நிறுவப்பட்டு, ஆதி சிவன் கோவில் வழிபாட்டுரிமையை மீள பெற வழிவகை கோரல்

2.அகழ்ந்தெடுக்கப்பட்ட எட்டுப்பட்டை தாரா வகை சிவலிங்கம் ஏன் மேலதிக ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை என கேள்வி எழுப்புதல்

3.அதனை சேதப்படுத்தி 3 துண்டாக உடைத்து சட்டவிரோதமாக அமைத்த தாதுகோப உச்சியில் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக தொல்லியல் திணைக்களத்திடம் விளக்கம் கோரல் போன்ற முக்கிய சமர்ப்பணங்களை செய்தால் நன்று என தோன்றுகின்றது.

அதே நேரம் மேற்படி விடயங்களை பாராளுமன்றில் முல்லைத்தீவு தொகுதி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆழமாக வலியுறுத்தி அரசிடம் உடனடி தீர்வை கோர வேண்டும்.

இன்று நீதிமன்றிற்கும் பின்னர் களத்தரிசிப்பிற்கும்பும் மேற்கொண்டு அந்த பிரதேச முன்னாள் இன்னாள் பாராளுமன்ற மாகாண பிரதேச சபை உறுப்பினர்கள் வலுச்சேர்க்குமாறும் கேட்டு நிற்கின்றோம்.அனைவருக்கும் இறையாசி வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...