24 6640347fcebe2
இலங்கைசெய்திகள்

குளியாப்பிட்டிய இளைஞனின் கொலைக்கான காரணம்

Share

குளியாப்பிட்டிய இளைஞனின் கொலைக்கான காரணம்

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுசித் ஜெயவம்ச என்ற இளைஞன், 17 வயது யுவதியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி திருமணம் செய்துக்கொள்ள மறுத்தமையே கொலைக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட இளைஞன் சிகிதியின் (பிரதான சந்தேகநபரின் ) மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், வேறு ஒரு யுவதியுடனும் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த யுவதியும் தற்போது கர்ப்பமாக இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த இளைஞரை வீட்டில் வைத்து கொலை செய்து பின்னர் சடலத்தை வாகனத்தின் பின் இருக்கையில் அமர வைத்து மாதம்பே பன்னிரெண்டாம் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தனது மகளை காதலித்து ஏமாற்றிய காரணத்தினால் இந்த கொலை இடம்பெற்றதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் முன்பு திருமணமாகி பின்னர் சட்டப்பூர்வமாக மனைவியிடமிருந்து பிரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...