gotta
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகச் சொன்ன கோட்டா! – பிடிவாதம் பிடிக்கும் ஆளுங்கட்சியினர்

Share

அரசியல் நெருக்கடிக்கு உடனடி தீர்வாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட மூன்று யோசனைகளில் இரண்டை ஆளுங்கட்சியினர் ஏற்க மறுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியால் முன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து விலகி, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முதல் யோசனை.

இதற்கு மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, பந்துல குணவர்தன, காமினி லொகுகே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், சரத் வீரசேகர இந்த யோசனையை ஏற்க மறுத்துள்ளார்.

அடுத்தாக பிரதமர் பதவி விலகி, அரசை நடத்துவதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்குவதல் என்பது இரண்டாவது யோசனையாகும். இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆளுங்கட்சிவசம் 113 என்ற சாதாரண பெரும்பான்மை இருப்பதால் அதற்கான தேவை எழவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்றாவதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆளுங்கட்சியினர் உடன்படவில்லை.

நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல்தான் நிறைவடைந்துள்ளது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...