tamilni 262 scaled
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி எலும்புக்கூடுகள் தொடர்பில் ஆய்வு

Share

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி எலும்புக்கூடுகள் தொடர்பில் ஆய்வு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து பெறப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம் காணும் ஆய்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த ஆய்வு நடவடிக்ககைள் அடுத்த வாரமளவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ள திகதிகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக குறிப்பிட்டார்.

மேலும், இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட 40 மனித எலும்புக் கூடுகளில் இருந்து அதனுடைய ஆய்வுகளை, அதன் வயது, அது ஆணா பெண்ணா போன்ற ஆய்வுகளை டிசம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பிலான தகவல்களை சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ நீதிமன்றில் தெரிவித்திருந்ததாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் பாரிய புதைகுழியில் இருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன.

கொக்கிளாய், முல்லைத்தீவு பிரதான வீதியூடாக பாரிய புதைகுழி வியாபித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, அதனை முழுமையாக தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி கடந்த ஜூன் 29ஆம் திகதி, அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான செலவுகள் குறித்தும் நீதிமன்றில் கலந்துரையாடப்பட்டதாக சட்டத்தரணி வீ.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும், “மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அகழ்வுப் பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதற்கான செலவுகள், குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் வீதி உடைக்கப்பட்டு மீண்டும் திருத்துவதற்கு எவ்வளவு தொகை செலவாகும் போன்ற விடயங்கள் பேசப்பட்டன.

நீதிமன்ற கலந்துரையாடல்

நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கணக்காளர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

நவம்பர் 29ஆம் திகதி புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

அது தொடர்பான மேலதிகத் தீர்மானத்திற்காக இந்த வழக்கை பெப்ரவரி 22ஆம் திகதி மீண்டும் அழைக்க முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தீர்மானிக்கப்பட்டது.” என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு, நண்பகல் வேளையில் நிறுத்தப்பட்ட போது, கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங் மீட்கப்பட்டன.

அந்த சடலங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படுவதற்கும் சில சான்றுகளும் காணப்படுகின்றன.

அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்திருந்தார்.

இதுவரை அகழ்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் அளவு மற்றும் எதிர்காலத்தில் தோண்டப்பட உள்ள நிலத்தின் அளவு குறித்தும் சிரேஷ்ட பேராசிரியர் விளக்கியிருந்தார்.

“தற்போது 3 மீற்றர் அகலத்திலும் 14 மீற்றர் நீளத்திலும் தோண்டியுள்ளோம். நாங்கள் இங்கு வந்தபோதும் கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டியிருந்ததால் அது நீளமாகவும் அகலமாகவும் இருந்தது.

எனவே இந்த 40 எலும்புக்கூடுகளை அகற்றிய பின்னர், குறைந்தது இரண்டு மீட்டர் தூரத்திற்கு தோண்ட வேண்டும்.

3 மீற்றர் மற்றும் 2 மீட்டர் சதுர மீட்டர்கள் என எடுத்துக் கொண்டால், நீளம் 2, அகலம் 3, ஆழம் சுமார் ஒன்றரை மீட்டர் ஆகும்

எஞ்சிய எலும்புக்கூடுகளை வெளிக்கொண்டுவர 6.63 கனமீட்டர் மண் அகற்றப்பட வேண்டும் என்பது எங்கள் கணிப்பு” என பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...