கிளிநொச்சி – சிறுபோகத்தில் வரலாறு காணாத சாதனை!
கிளிநொச்சி மாவட்டத்தில், இம்முறை சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை நிகழ்ந்துள்ளது என மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நான்கு மிகப்பெரிய குளங்களும் 5 நடுத்தர குளங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
2019 ஆண்டுக்கு முன்னர் 40சதவீதத்துக்கு குறைவாக காணப்பட்ட மாவட்டத்தின் சிறுபோக அளவானது இரணைமடு குளத்தின் புனரமைப்பின் பின்னர் 2019 இல் 68 வீதமாகவும் 2020 இல் 68.2 வீதமாகவும் இவ் வருடம் 2021 இல் 78.6 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
இவ் அதிகரிப்பானது கிளிநொச்சி மாவட்ட வரலாற்றில் இதுவரை காணப்படாத உச்ச அடைவு மட்டமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இம்முறை இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக செய்கை 82 வீதமாக பயிற்செய்கை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரணைமடு குளத்தின் கீழான ஏறக்குறைய 100% பயிற்செய்கை இம்முறை இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment