கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை. எனவே, அது உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று சபையில் வலியுறுத்தினார்.
” திறைசேரி செயலாளருக்கும், அமெரிக்க நிறுவனத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அதனை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை விடுக்கவேண்டும்.” – என்றும் அநுர குறிப்பிட்டார்.
அதேவேளை, நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகரம் உள்ளது. எனவே, உடன்படிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சருக்கு அறிவிக்குமாறு சபாநாயகரிடம் ரணில் விக்கிரமசிங்க, லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
#SrilankaNews
Leave a comment