கேகாலை துப்பாக்கிச்சூடு! – இளம் யுவதி மரணம்

gun shot 1200 1

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகமொன்றிலிருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பணியாற்றிய கேகாலை, ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளருக்குரியது.

குறித்த பெண் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது இது கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

#SriLankaNews

Exit mobile version