அண்மையில் காரைநகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பரிசோதகர்கள் தனிமைப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த பரிசோதனையில் 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் காரைநகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோருடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் தகவல் அறிந்த சுகாதாரப் பிரிவினர் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதேவேளை, அவர்களிடம் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் மீது சிலர் தாக்குதல் முயற்சியும் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த மாதிரிகளின் சோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற நிலையிலேயே 13 சிறுவர்கள் உட்பட 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தொற்றாளர்கள் திருமண நிகழ்வுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் சுகாதாரப் பிரிவு உறுதிசெய்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment