சம்பிக்க விரும்பினால் அமைச்சுப் பதவியை ஒப்படைக்கத் தயார்! – காஞ்சன அதிரடி

காஞ்சன விஜேசேகர

“நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க விரும்பினால் மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சுப் பதவியை அவரிடம் ஒப்படைக்க நான் தயார்” என்று மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஏற்கனவே இந்த அமைச்சுப் பதவியை சம்பிக்க ரணவக்க வகித்துள்ளார். அவருக்கு அனுபவம் உள்ளது. எனவே, அவர் முன்வந்தால் அமைச்சுப் பதவியைக் கையளிக்க நான் தயார். எமக்குப் பதவி முக்கியம் அல்ல. நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதே முக்கியம்.

இதற்காக அரசியல் பேதங்களை மறந்து இணைந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை வரவேற்கின்றோம்” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version